சவுதிஅரேபியா தொழிலதிபர் புதுமை! கேன்சர் விழிப்புணர்வுக்காக தாடியில் டை!!

சவுதி அரேபியா: சவுதியை சேர்ந்த தொழிலதிபர் தனது தாடியில் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக பிங்க் நிற டை அடித்துள்ளார்.சமீர்குர்தி (46)யின் மனைவி டிமா. இத்தம்பதிக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
3 ஆண்டுகளுக்கு முன்னர் டிமா புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.
அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தேறினார். தற்போது மீண்டும் அந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. டிமாவுக்கு சிகிச்சை மீண்டும் நடந்துவருகிறது.

இந்நிலையில், புற்றுநோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு உதவிடவும், புற்றுநோயாளிகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவும் சமீர்குர்தி திட்டமிட்டார்.
பிங்க் நிறத்திலான ரிப்பன் புற்றுநோய் விழிப்புணர்வை குறிக்கும். எனவே, தனது தாடியில் பிங்க் நிறத்தை டை அடித்துக்கொண்டார் சமீர்குர்தி.

வைரத்தில் டி என்று பொறித்து வாழ்த்து அட்டைகளை மனைவிக்காக பிரத்யேகமாக வடிவமைத்துள்ளார்.
அதனை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட பிற நோயாளிகளுக்கும் அனுப்பிவைத்து அவர்களை மகிழ்வித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here