வெளிநாட்டினர் மீதான வரி! குவைத்தில் கடும் எதிர்ப்பு!!

குவைத்: வெளிநாட்டினர் மீது வரிவிதிக்கும் திட்டம் அரசியல் சாசன சட்டத்துக்கு முரணானது. அதனை ஏற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.குவைத் அரசு, வெளிநாட்டினருக்கு தங்கள் நாட்டில் கிடைக்கும் பல சலுகைகளை அனுபவிக்க வரிவிதிக்கலாம் முடிவெடுத்தது.
அதன்படி வெளிநாட்டினர் பெறும் ஊதியம் அடிப்படையில் வரி வசூலிப்பது என்று அறிவிப்ப்பு வெளியானது.குவைத் திராம் 100வரை சம்பளம்பெறுவோருக்கு ஒரு சதவீதமும், 100முதல் 200குவைத் திராம் பெறுவோருக்கு 2சதவீதம்., 300முதல் 499வரை சம்பளம் பெறுவோருக்கு 3சதவீதம். அதற்கு அதிகமாக சம்பளம் பெறுவோருக்கு 5%வரி விதிக்க தீர்மானம் செய்யப்பட்டது.

இதற்கான சட்டமசோதாவை நாடாளுமன்ற விவகாரக்குழு நிராகரித்து விட்டது.
குவைத் அரசின் நிதிக்குழுவும் அம்மசோதாவை நிராகரித்துள்ளது.
இதனால் நாடாளுமன்றத்தில் அம்மசோதா தோற்கடிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here