குவைத்தில் வேலைக்காரி கொலை! தம்பதிக்கு நீதிமன்றம் மரணதண்டனை!!

குவைத்: வேலைக்காரியை கொன்ற வழக்கில் குவைத் நீதிமன்றம் தம்பதிக்கு தூக்கு தண்டனை வழங்கியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் பிலிப்பினோ(29). குவைத்தில் ஒருவரது அடுக்குமாடி குடியிருப்பில் வேலைபார்த்துவந்தார்.பிப்ரவரி மாதம் அவர் உடல் வீட்டில் இருந்த ப்ரிட்ஜில் இருந்து மீட்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ, பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் கல்ப் நாடுகளில் வேலைக்கு செல்லவேண்டாம் என்று அறிவித்தார்.
ஏற்கனவே பணியில் இருப்பவர்கள் அந்நாடுகளில் நிலவும் அசாதாரண நிலையால் தாய்நாடு திரும்புங்கள் என்று கூறினார்.

பிலிப்பினோவின் மர்ம மரணம் குறித்த வழக்கை விசாரித்த போலீசார் லெபனானை சேர்ந்த இன்ஜினியர், அவர் மனைவி ஆகியோரை கைது செய்தனர்.
இத்தம்பதியினர் பிலிப்பினோவை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. குவைத் நீதிமன்றம் அத்தம்பதிக்கு தூக்குத்தண்டனை வழங்கியது.

இந்நிலையில், லெபனான் அரசு சார்பில் குவைத் அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. தனது நாட்டு பிரஜை குற்றம் செய்யாதவர். பிலிப்பினோ வேலைபார்த்த வீட்டின் உரிமையாளர் ஏற்கனவே கைதாகி உள்ளார்.

அவரிடம் விசாரித்து நடவடிக்கை எடுங்கள். எங்கள் நாட்டு பிரஜையை பத்திரமாக திருப்பி அனுப்புங்கள் என்று கோரப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here