காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்தும்,
உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் அதிமுகவினர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில்
உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.இதில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.’காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரத்திற்குள் அமைக்க வேண்டும்’என சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு பின்பற்றவில்லை.இதனால், மத்திய பா.ஜ., அரசு மீது முதல்வர் பழனிசாமி தலைமையிலான, அ.தி.மு.க., அரசு உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளது.அதேநேரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ள ‘ஸ்கீம்’ என்ற வார்த்தைக்கு
விளக்கம் கேட்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மூன்று மாதம்
அவகாசம் கோரியும் மத்திய அரசும் மனுத்தாக்கல் செய்துள்ளது.இந்நிலையில் மத்திய அரசை கண்டித்தும், வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் அ.தி.மு.க., சார்பில் தமிழகம் முழுவதும்இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. சென்னையில்நடக்கும் போராட்டத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here