அதிமுக உண்ணாவிரதத்தில் துரோகம்! ராஜதுரோகம்!!

சென்னை: காவிரி நீர் பிரச்சனையில் துரோகம் செய்தது திமுக என்று முதல்வரும், ராஜதுரோகம் செய்தது திமுக என்று துணைமுதல்வரும் விமர்சித்தனர்.
காவிரி வாரியம் அமைக்க மத்திய அரசு தாமதித்து வருவதை கண்டித்து அதிமுக உண்ணாவிரத போராட்டம் நடத்தியது.
சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள் பங்கேற்றனர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்,
காவிரிபிரச்சனையில் துரோகம் செய்தது திமுக. 1976ல் சர்க்காரியா கமிஷனுக்கு பயந்து காவிரி ஒப்பந்தத்தை அக்கட்சி புதுப்பிக்கவில்லை. நடுவர்மன்ற தீர்ப்பை மத்தியில், மாநிலத்தில் திமுக ஆட்சிக்காலத்தில் அமல்படுத்த தவறியதால் இப்போதும் போராடி வருகிறோம் என்றார்.துணைமுதல்வர் பன்னீர்செல்வம் பேசுகையில்,  காவிரி பிரச்சனையில் ராஜதுரோகம் செய்தது திமுகதான்.
2007ல் திமுக ஆலோசனையை பெற்றுத்தான் மத்திய அரசு நடந்தது. காவிரிநடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த அரசாணை வெளியிட ஜெயலலிதா கேட்டுக்கொண்டதை திமுக செவிசாய்க்கவில்லை.                                                                   நீதிமன்றத்தின்மூலம் காவிரி வாரியம் அமைக்க உத்தரவு பெற்றது அதிமுக. தற்போது அதனை அமைக்கவும் அறவழி போராட்டத்தில் கடைசிவரை ஈடுபட்டு வெற்றிபெறும் என்றார்.உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற பலரும் நடுவே எழுந்து வெளியே சென்றனர்.
மேடையின் பின்புறம் இருந்த சாலையில் அவர்களுக்கு பிரியாணி ரகசியமாக பரிமாறப்பட்டது.
வேலூர், புதுக்கோட்டை நகரங்களில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றவர்கள் உண்டு மகிழ்ந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here