போக்குவரத்து போலீசாரின் தொடரும் அத்துமீறல்!

சென்னை: மன அழுத்தம், உடற்சோர்வுடன் பணியாற்றவேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதால் போக்குவரத்து போலீசார் மக்களிடம் அத்துமீறி நடந்துகொள்ளும் சம்பவங்கள் சமீபத்தில் அதிகரித்து வருகின்றன.திருச்சியில் உஷா என்ற பெண்ணின் மரண சம்பவத்தை போன்ற அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னை தி.நகர் போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை என்றபெயரில் அத்துமீறி நடந்துகொண்டனர்.சென்னை வடபழனியைச் சேர்ந்த பிரகாஷ், தனது வாகனத்தில் தாய், தங்கையை அழைத்து வந்தார். அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் வண்டியை நிறுத்தினார்.
பிரகாசுக்கும் போலீஸ்காரருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.கோபமுற்ற போலீஸ்காரர்கள், பிரகாஷை அருகில் இருந்த கம்பத்தில் கையை முறுக்கி அடித்துப்பிடித்து நிறுத்தினர்.
தாய், சகோதரி கதறியும் போலீசார் கொடூரமாக நடந்துகொண்டனர். இந்த விடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
பிரகாஷ் போலீசாரை அடிக்கவந்ததாக வழக்குப்பதிவாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here