காவிரி மேலாண்மை வாரியம்! அதிமுக எம்.பி ராஜினாமா!!

டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையல் அதிமுக ராஜ்யசபா எம்.பி முத்துக்கருப்பன், தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார்.ராஜினாமா கடிதத்தை செய்தியாளர்களிடம் அவர் வாசித்து காட்டினார்.
எனது பதவி காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் உள்ளது. மத்திய அரசு,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் மிகுந்த மனவேதனையுடன் மக்களுக்காக ராஜினாமா செய்கிறேன்.காவிரி நீர் பிரச்னையால் 19 மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காவிரிக்காக அதிமுக கடுமையாக போராடி வருகிறது. அரசியலுக்காக குடிக்க
தண்ணீர் கூட கொடுக்காமல் இருக்கலாமா? யார் சொன்னாலும் எனது முடிவில்
பின் வாங்க போவதில்லை. சமாதானமும் அடைய மாட்டேன் என்றார் .காவிரி பிரச்னையில் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது மனவேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கைய்ய நாயுடுவிடம் அளிக்க உள்ளதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here