நடிகைகள் எல்லோரும் யார் தெரியுமா?

சென்னை: நடிகைகள் எல்லோரும் சுதந்திரத்தை தியாகம் செய்தவர்கள் என்று தெரிவித்துள்ளார் காஜல் அஹர்வால்.
தினத்தந்தி நாளிதழுக்கு அவரளித்த பேட்டி:“சினிமாவில் 10 வருடங்களாக நடித்துக்கொண்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வளவு உயரத்துக்கு வருவேன் என்று நினைத்து பார்க்கவில்லை. இதன் பின்னணியில் எனது உழைப்பு, திறமை, கடவுள் ஆசிர்வாதம், ரசிகர்களின் ஆதரவு ஆகியவை உள்ளன.
என்னை பெற்றோர்கள் தைரியமாக வளர்த்து உள்ளனர். எதற்கும் பயப்பட மாட்டேன்.நடிகைகளுக்கு பொது இடங்களில் சில நேரங்களில் அசவுகரியங்களும் ஏற்பட்டு விடுகின்றன.
நாங்கள் ரசிகர்களை சந்தோஷப்படுத்த உழைக்கிறோம். எங்கள் உணர்வுகளை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நடிகைகளுக்கு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. பெயர் புகழுக்காக சுதந்திரத்தை தியாகம் செய்யவேண்டியுள்ளது.எனக்கு எதிரான விமர்சனங்களை நான் கண்டு கொள்வது இல்லை.
சாதாரண பெண்ணாக இருந்திருந்தால் எனது வாழ்க்கை சிறிய உலகத்துக்குள் அடங்கி இருக்கும். நடிகையானதால் உலக அளவில் பெரிய அறிமுகம் கிடைத்து இருக்கிறது.
சிலர் சினிமா தொழிலை கேவலமாக பேசுகிறார்கள். எல்லா துறையிலும் நல்லதும் கெட்டதும் இருக்கிறது.
யோகா-தியானம் செய்து மனதை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கிறேன்.
இவ்வாறு பேட்டியில் காஜல் அஹர்வால் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here