360டிகிரி புகைப்படங்கள்! பேஸ்புக்கில் புதுவசதி அறிமுகம்!

மும்பை:பேஸ்புக் மெசஞ்சரில் புதிய வசதி அறிமுகப்படுத்தியுள்ளது.
பேஸ்புக் மெசஞ்சர் தனி ஆப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது 1.3பில்லியன் மக்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.இம்மெசஞ்சரை பயன்படுத்த தினந்தோறும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
எழுத்துக்களால் ஆன செய்தி தவிர படங்கள், அசைபடங்கள், விடியோ, 3டி படங்கள் ஆகியவற்றையும் மெசஞ்சரில் பகிர்ந்துகொள்ளும் வசதி உண்டு.

மேலும், ஒரு குரூப்பில் சேர்ந்து கொள்வதற்கான அழைப்பு அனுப்பும் வசதி, நிர்வாகி அனுமதிப்பவர் மட்டுமே குழுவில் இணையும் வசதி ஆகியவையும் மெசஞ்சர் ஆப்பில் உள்ளன. ‘
தற்போது 360 டிகிரி அளவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பேஸ்புக் மெசஞ்சரில் அனுப்பிவைக்க முடியும்.அடுத்ததாக ஹெச்டி தரத்திலான விடியோக்களை பகிரும் வசதியை பேஸ்புக் மெசஞ்சர் அறிமுகப்படுத்தவுள்ளது.
இவ்வசதி தற்போது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here