1,187 சட்டங்கள் ரத்து! சதானந்தகவுடா தகவல்!!

பெங்களூர்: மத்திய அமைச்சர் சதானந்தகவுடா, பெங்களுரில் தொழில் நிறுவன உரிமையாளர்களுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.அப்போது நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையே நல்லுறவு ஏற்பட வேண்டும். நாட்டின் நிதி ஒழுங்குமுறையை உறுதிப்படுத்த மத்திய அரசு திடமான நடவடிக்கையை எடுத்துவருகிறது.
அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தி சிறிய நிறுவனங்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும்சட்டங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நடுவர் மன்றங்கள் மறுவாழ்வு மையங்களாக இருந்து வருகிறது. குழப்பங்களை ஏற்படுத்திய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இதுவரை 1,187 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தொழிலாளர் துறையில் 38 சட்டங்கள் உள்ளன. இது 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் இப்போது எந்த வாக்குறுதியும் கொடுக்க முடியாது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு நல்லாட்சியை வழங்கி இருக்கிறது என கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here