போலீசின் மனிதநேயத்துக்கு குவியும் பாராட்டு!!

தெலங்கானா: ஏழைமக்களுக்கு உதவுவதில் தொடர்ந்து முன்னணியில் உள்ளனர் தெலங்கானா போக்குவரத்து போலீசார்.
புதிய மாநிலமான தெலங்கானாவில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசாருக்கு உதவியாக ஊர்க்காவல் படையினர் பணியாற்றுகின்றனர்.

அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்களிடம் எப்படி நடந்துகொள்வது என்பது அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளில் முக்கியமான ஒன்று.
இதனால், ஊர்க்காவல் படையினர் போக்குவரத்து பணியில் மட்டுமின்றி மனிதநேய பணியிலும் அவ்வப்போது ஈடுபட்டு காவல்துறைக்கு நல்லபெயர் வாங்கித்தருகின்றனர்.குக்கட்பள்ளி போக்குவரத்துகாவல் நிலைய ஊர்க்காவல்படை வீரர் கோபால்.
அங்குள்ள பல்கலைக்கழக சர்க்கிள் பகுதியில் ஏழைப்பெண் உணவுக்கு தவித்துவருவதை பார்த்தார்.
உடனடியாக அப்பெண்ணுக்கு சாப்பாடு வாங்கித்தந்தார்.
சாப்பாட்டுப்பொட்டலத்தை பிரிக்கக்கூட அப்பெண்ணுக்கு சக்தியில்லை.இதனால் உணவை தானே அப்பெண்ணுக்கு ஊட்டினார். அப்புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவருக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.
அதேபோன்று, ஜஹாங்கிர் என்ற ஊர்க்காவல் வீரர், 4வயது உடல்நலம் குன்றிய குழந்தையை மீட்டு பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தார். அவருக்கும் பாராட்டுகளை மக்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here