காவிரிக்காக காங்கிரஸ் போராட வேண்டும்! தம்பிதுரை வலியுறுத்தல்!!

சென்னை: உச்சநீதி மன்ற தீா்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு முடிந்த நிலையில், மத்திய அரசு கால தாமதம் செய்து வருகிறது. இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “ஜல்லிக்கட்டுக்கு மக்கள், இளைஞர்கள் ஒன்றுகூடியது போல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் மக்கள் ஒன்றுகூட வேண்டும். அதேவேளையில், மக்களின் போராட்டம் சட்டம் ஒழுங்கை மீறாமல் இருக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.அதிமுக அரசு காவிரி பிரச்சினையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். “அவ்வாறு தீர்மானம் கொண்டுவந்தால் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்குமா? சோனியாவும் ராகுலும் இது குறித்து அறிக்கை வெளியிடட்டும். காங்கிரஸ் கட்சியும் சேர்ந்தால்தான் பலம் கிடைக்கும்.காவிரி பிரச்சினைக்காக மட்டுமே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவோம் என்று குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here