சம்பளப்பணம் முழுவதும் அரசிடம் அளித்தார் சச்சின்!

மும்பை:கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ராஜ்யசபா உறுப்பினர் சம்பளப்பணம் முழுவதையும் பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
2012ல் ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்றார் சச்சின்.அவரது சம்பளம் மற்றும் சலுகைகளுக்காக ரூ.90லட்சம் மத்திய அரசு அளித்திருந்தது.
அது முழுவதையும் பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
இதற்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் அலுவலகம் சச்சினுக்கு கடிதம் எழுதியுள்ளது.
சச்சின் தனது பதவிக்காலத்தில் 7சதவீத அளவுக்கே நாடாளுமன்ற அலுவல்களில் பங்கேற்றுள்ளார். 400நாடாளுமன்ற நிகழ்வுகளில் அவர் பங்கேற்றது 29ல் மட்டுமே.இது விமர்சிக்கப்பட்டது என்றாலும் 22கேள்விகள் அவரால் கேட்கப்பட்டுள்ளன.
தனது தொகுதி வளர்ச்சி நிதியை சிறப்பாக பகிர்ந்தளித்துள்ளார் சச்சின்.
185திட்டங்களுக்கு நிதி வழங்கியுள்ளார். அவற்றில் பல திட்டங்கள் கல்வி, மாணவர் வளர்ச்சி தொடர்புடையன.ஆந்திரமாநிலம் புட்டம்ராஜூ கந்ரிகா, மகாராஷ்டிராவில் தூஞ்சா கிராமங்கள் இவரால் தத்தெடுக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here