தனியார் டிவி செய்தி வாசிப்பாளா் தற்கொலை

ஹைதராபாத்: ராதிகா ரெட்டி இவா் ஆந்திராவில் உள்ள தனியார் செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் பெண் செய்தி வாசிப்பாளர்.தனது நேர்த்தியான வாசிப்பின் காரணமாக அனைவரிடமும் பிரபலமானவர். இவர் தன் கணவரிடம் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்றுள்ளார்.அடுக்கு மாடி குடியிருப்பில் தந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதில் மனவளர்ச்சி குன்றிய ஒரு மகனும் இருக்கிறார்.
இந்நிலையில் பணி முடிந்து ஞாயிறு இரவு ராதிகா ரெட்டி தனது அபார்ட்மெண்ட்டின் ஐந்தாவது மாடியில் இருந்து, குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது கைப்பையிலிருந்து தெலுங்கில் எழுதப்பட்ட கடிதம் ஒன்று மீட்கப்பட்டது.அதில் என் மூளையே எனக்கு எதிரி. என் சாவுக்கு யாரும் காரணமில்லைஎன்று குறிப்பிடப்பட்டிருந்ததது. ஞாயிறு இரவு வீடு திரும்பிய அவா் ஐந்தாவது மாடிக்குச் சென்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவா் தற்கொலைக்கு பணிச்சுமை மற்றும் மனஅழுத்தம் காரணமாக இருக்கலாம் என போலீசார் கருத்து தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here