சட்டீஸ்கர்: சட்டீஸ்கர் மாநிலம் கொரியா பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவவலி ஏற்பட்டது.இதையடுத்து அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். டாக்டர்கள் இல்லாததால் கர்ப்பிணி பெண் ஆட்டோவிலேயே குழந்தை பெற்றார்.
மருத்துவமனைகளில் டாக்டர்கள் இல்லாததால் வருடத்திற்கு 45000 மேற்பட்ட
கர்பிணிப்பெண்கள் சரியான மருத்துவம் கிடைக்காமல் இறக்கின்றனர்.முறையான சிகிச்சை இல்லாமல் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5 கர்ப்பிணிகள் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தொவித்துள்ளது.