‘மெர்குரி’ படத்தில் வசனமே இல்லையாம்!

சென்னை: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வசனம் இல்லாமல் உருவாகியுள்ள படம் ‘மொ்குரி’.பிரபு தேவா இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படம் ‘பீட்சா’ படத்துக்குப் பிறகு திகில் பட பாணியில் உருவாகியுள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.இதில் தனக்கு ஏற்பட்ட சவால்கள் குறித்து கூறியுள்ளார். ஒரு திரைப்படத்துக்கு இசை என்பது மிகவும் முக்கியம். ஆனால், மெர்குரியில் வசனமே இல்லாததால், அந்தப் படத்தின் கதையை இசையின் மூலமே சொல்ல வேண்டும். இது எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.வசனங்கள் இல்லாததால் ஒவ்வொரு காட்சியையும் கவனமாகக் கையாள வேண்டியிருந்தது.மெர்குரி போன்ற படங்களில் வேலை செய்வது என் வாழ்நாளுக்கான வாய்ப்பு. இது எல்லா இசையமைப்பாளர்களுக்கும் கிடைக்காது என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here