Connect with us

Cinema

ட்விட்டரில் முதலிடம் பிடித்தார் ஸ்ருதிஹாசன்!

Published

on

சென்னை: நடிகரும் அரசியல்வாதியுமான கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான சூர்யா, விஜய், அஜித், விஷால் உள்ளிட்ட பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்தவர் ஸ்ருதிஹாசன்.தமிழ், தெலுங்கு, இந்தி சினிமா உலகிலும் முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். இவர் சமூக வலைதளமான ட்விட்டரில் இருப்பவர்.
தனது ட்விட்டர் பக்கத்தில் தான் நடித்துவரும் படங்களின் புகைப்படங்கள் மற்றும் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார். ஸ்ருதிஹாசன் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு உடனே பதில் அளித்து வருகிறார்.தற்போது ட்விட்டரில் அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனைத் தொட்டிருக்கிறது. இதுவரை தென்னிந்திய நடிகைகளில் யாருக்கும் கிடைக்காத சிறப்பு ஸ்ருதிக்குக் கிடைத்திருக்கிறது.தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் ஸ்ருதி. “என்னுடைய அழகான ட்விட்டர் குடும்பத்தினருக்கு நன்றி. உங்களின் அன்பும் ஆதரவும் மிகுந்த உற்சாகமளிக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator