ரோந்துப்பணியில் மது அருந்திய பெண் போலீஸ் சஸ்பெண்ட்!

பழனி: ரோந்துப்பணியின் போது மதுஅருந்திய பெண் போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இணையத்தில் பெண் போலீஸ் ஒருவர் மதுஅருந்தும் காட்சி தொடர்பான விடியோ வெளீயானது.  அதனைப்பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இரவுரோந்துப்பணிக்காக போலீஸ் வாகனத்தில் வந்த ஒரு பெண் ஏட்டு போலீஸ் உடையில் மது அருந்துவதையும், அவர் போதையில் இருப்பதையும் வாகனத்தில் இருந்த டிரைவர் படமெடுத்துள்ளார்.இந்த விடியோ லீக் ஆகி பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரித்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி சாமிநாதபுரம் காவல்நிலையத்தை பெண் ஏட்டு அவர் என்று தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து அப்பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here