ராணுவ அதிகாரி உடையில் அசத்தல்! மிடுக்காகவந்து பத்மவிருது பெற்றார் தோனி!!

டெல்லி: ராணுவ அதிகாரி உடையில்வந்து குடியரசுத் தலைவரிடம் பத்மபூஷண் விருதுபெற்றார் கிரிக்கெட் வீரர் தோனி.
பத்ம விருதுகள் கடந்த 20ம் தேதி 42 பேருக்கு வழங்கப்பட்டன.
ஏப்.2ம் தேதி திங்கட்கிழமை இரண்டாம் கட்ட விழாவில் மேலும் 42பேருக்கு வழங்கப்பட்டன.தோனி இந்திய கிரிக்கெட் அணிக்குச் சிறந்த பங்களிப்பை அளித்திருக்கிறார்.
அவருடைய தலைமையில் இந்திய அணி 20 ஓவர் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பைகளை வென்றது.
டெஸ்ட் அரங்கிலும் சிறந்த இடத்தைப் பிடித்தது.
இதனால் இவருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டது.குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ராணுவ உடையில் மிடுக்காக நடந்துவந்து குடியரசுத் தலைவரிடம் பத்மபூஷண் விருதைப் பெற்றுக்கொண்டார்.

மேலும், தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், பில்லியர்ட்ஸ் வீரர் பங்கஜ் அத்வானி உள்ளிட்டோர் பத்ம விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.
7 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் (ஏப்ரல் 2, 2011) மகேந்திரசிங் தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here