குழந்தையை விற்க முயன்ற தந்தை!

சென்னை: ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தம்பதியினர் வடபழனி தனியார் விடுதியில்
தங்கியுள்ளனர். இவர்களுக்கு 10 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. இந்த
குழந்தையை விற்க முயற்சிப்பதாக வடபழனி ஆர்-8 காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.தகவலையடுத்து போலீஸார் விரைந்து சென்றனர். அங்கிருந்த ஆந்திராவை சேர்ந்த மனோஜ் மற்றும் அவரது மனைவி கவிதா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில் மனோஜுக்கு பணம் தேவைப்பட்டதால் மனைவியின் சம்மதமின்றி குழந்தையை விற்க முற்பட்டது தெரிந்தது.
மகேஷ் என்பவர் மூலம் 10 மாத பெண் குழந்தையை விற்க பேச்சுவார்த்தை நடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து மனோஜ், மகேஷ் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதைதொடர்ந்து போலீஸார் குழந்தை மற்றும் தாயை அருகில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here