சிக்கன் எடுத்துவர தாமதம்! வாலிபர் குத்திக்கொலை!

ஹைதராபாத்: சிக்கன் கறி எடுத்துவர தாமதம் ஆனதால் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் ஆந்திரமாநிலத்தில் நடந்துள்ளது.சார்மினார் அருகே ஹுசைனி ஆலம் பகுதியில் திருமண நிச்சயதார்த்த விழா நடந்தது.
நிகழ்ச்சி முடிந்து சாப்பாட்டு நேரம் தொடங்கியது. அப்போது சிக்கன்கறியை எடுத்துவர தாமதம் ஆனது.இதனால் சாப்பிட அமர்ந்திருந்தவர்களில் சிலர் பொறுமை இழந்தனர்.
பெண்வீட்டார், மாப்பிள்ளை வீட்டாரிடம் பிரச்சனை ஏற்பட்டது.
சிலர் சாப்பிடாமல் வெளியேறினர். சிறிதுநேரத்தில் திரும்பி கும்பலமாக திரும்பிவந்த அவர்கள் பந்தி நடக்கும் இடத்தில் ரகளை செய்தனர்.

சிக்கன் கறி பரிமாறிவந்த வாலிபர்களை கத்தியால் குத்தினர். அன்வர் என்ற வாலிபர் அங்கேயே இறந்தார். மற்றொருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here