மதுபாட்டிலுடன் கரடியை கொஞ்சிய இளம்பெண்! வைரல் படங்கள்!!

லண்டன்:மதுபாட்டிலுடன் கரடியை கொஞ்சும் தில்லான பெண்ணின் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரிச்கிட்ஸ் ஆப் லண்டன் இன்ஸ்டாகிராம் கணக்கில் உலகம் முழுவதும் இருந்து படங்கள், விடியோக்கள் பதிவிடப்படும்.உயர்ந்த விலை ஆடை, சொகுசு வாகனம், பொருட்கள், இளைஞர்கள், பெண்கள் குறித்த விபரங்கள் அதில் இடம்பெறும்.
சமீபத்தில் கரடியுடன் ஒரு பெண் இருப்பது போன்று விடியோ வெளியானது.
பனிபடர்ந்த மலை ஒன்றில் ஒரு இளம்பெண் கரடியை கொஞ்சுகிறார்.
சுமார் அரை நிமிடம் ஓடக்கூடிய அந்தவிடியோவில் அப்பெண்ணுக்கு அருகில் மதுபாட்டில் உள்ளது.பர் எனப்படும் விலங்குகள் தோலினால் ஆன ஆடையை அணிந்துள்ள அப்பெண் கரடியை கொஞ்சுவது முரண்பாடாக உள்ளது என்று விடியோவை பார்த்தவர்கள் கருத்து பதிவிட்டுள்ளனர்.
அப்பெண் ஒரு மாடல் என்றும், ரஷ்யாவை சேர்ந்தவர் என்றும், விளம்பர ஷூட்டிங்கில் இச்சம்பவம் நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here