தெலங்கானா சபாநாயகருக்கு பாலாபிஷேகம்!

வாராங்கல்: நடிகர், தலைவர் படங்கள், கட்.அவுட், சிலைக்கு பாலாபிஷேகம் செய்த ஆதரவாளர்கள் தற்போது நிஜமாகவே பாலாபிஷேகம் செய்ய முன்வந்துள்ளனர்.தெலங்கானா சபாநாயகர் மதுசூதனாச்சாரி. வராங்கல் மாவட்டத்தில் உள்ள சாயம்பேட்டை கிராமத்துக்கு சென்றார்.

அக்கிராமத்தின் கிராம சபைக்கான அலுவலகம் புதிதாக கட்டப்பட்டது. அதன் திறப்புவிழாவுக்காக சென்றார் மதுசூதனாச்சாரி.

விழாவில் அவருக்கு வழக்கம்போல் சால்வைகள் போர்த்தப்பட்டன. அக்கிராமத்தை சேர்ந்த சிலர் அவருக்கு பாலாபிஷேகம் செய்ய விரும்பினர்.

முதலில் அதை வேண்டாம் என்று மறுத்தார் சபாநாயகர். தொண்டர்கள் விடாப்பிடியாக இருந்தனர். அவர் மேல் பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர்.

இச்சம்பவத்தை எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here