ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்! மத்திய,மாநில அரசுகள் பாராமுகம்!!

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து குமரெட்டியாபுரம் உட்பட பல்வேறு கிராமங்களிலிருந்து போராட்டம் நடந்துவருகிறது.இந்நிலையில் இந்தப் போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்.அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:மக்கள் உயிரை விட காப்பர் வியாபாரம் முக்கியம் என்று நினைக்க வேண்டுமா? .
சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் இந்த ஆலையை குடியிருப்பு, விவசாயப் பகுதிகளில் அமைப்பது தவறு.
மத்திய அரசும், தமிழக அரசும் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் பாராமுகமாய் இருக்கின்றன.நான் செல்லுமிடங்களிலெல்லாம் ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு குரல் கொடுப்பேன்.
நான் புதிதாக விளம்பரம் தேட வேண்டிய அவசியமில்லை. 5 வயதிலிருந்தே எனக்கு விளம்பரத்துக்குப் பஞ்சமில்லை. இவ்வாறு கமல் பேட்டியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here