பரோல் முடிவதற்குள் சிறைக்குவந்தார் சசிகலா!

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ராஹாரா சிறைச்சாலையில் வருமானத்துக்கு அதிகமாகி சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார்.அவரது கணவரும்,புதிய பார்வை இதழின் ஆசிரியருமான ம.நடராஜன் கடந்த 19-ந் தேதி நள்ளிரவு 1.30 மணியளவில் உடல்நல குறைவால் காலமானார்.
கணவரது இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக சிறை நிர்வாகத்திடம் சசிகலா பரோல் கோரினார்.அவருக்கு 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. அதன்படி சிறையில் இருந்து கடந்த 20-ந் தேதி தஞ்சாவூருக்கு புறப்பட்டார்.அங்கு கணவரது சொந்த ஊரான விளாரில் அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.இந்நிலையில் சசிகலா சனிக்கிழமையன்று தஞ்சாவூரில் இருந்து புறப்படடார்.
அவருடன் காரில் டி.டி.வி. தினகரனும் சென்றார். மாலை சுமார் 4 மணியளவில் அவர் மீண்டும் பெங்களூா் பரப்பன அக்ரஹாரா சிறைக்குத் திரும்பினார். பரோல் நாட்கள் முடிவதற்கு முன்பே சசிகலா சிறை திரும்பியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here