மெரினாவில் மாணவா்கள்! கமல் கண்டனம்!!

சென்னை: நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு உண்ணாவிரதத்தில் நம்பிக்கை இல்லை என்று கூறினார்.மேலும் காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் போராட்டம் பற்றிய தனது கருத்துகளைத் தெரிவித்தார்.சென்னை காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கக் கோரி, சென்னை மெரினா கடற்கரையில் சில இளைஞர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்குக் கண்டனம் தெரிவித்த கமல், “மாணவர்கள் கொதித்தெழுந்து அங்கு கூடியிருக்கிறார்கள். இனிமேலும் கூடுவார்கள்” என்று கூறினார். போராட்டத்தில் ஈடுபட்டவா்களை கைது செய்த போலீசார் பின்னா் விடுவிதனர்.
இன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடும் மக்களைச் சந்திக்கவுள்ளார் கமல். “எனக்கு அங்கு நடக்கும் விஷயங்கள் தெரியும். மக்களுக்கு, என்னைவிட அதிகமாகத் தெரியும். பேரறிஞர்கள் சிலர் புள்ளிவிவரங்கள் கேட்கிறார்கள். அதை நாளை சொல்கிறோம்” என்று கூறினார்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் முதலில் தூக்கத்தில் இருந்து எழ வேண்டுமென்று தெரிவித்தார்.திருச்சியில் ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெறவுள்ள மக்கள் நீதி மய்யம் மாநாட்டுக்குச் செல்லும் வழியில் ரயில் நிலையங்களில் கமல்ஹாசன் தொண்டர்களைச் சந்திக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது.இது தொடர்பாக, நேற்றிரவு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார் கமல்ஹாசன். அதில், “மக்களுடன் நான் கலக்கவிருந்த பயணத்தை அரசியலாக்குகிறார்கள். அதற்கு ரயில் மேடையல்ல என்பதை நாமறிவோம். மக்கள் நலனை மையமாகக்கொண்ட கட்சி இது. ரயில் நிலையங்களில் மக்களுக்கும் பயணிகளுக்கும் இடையூறின்றிச் செய்துவிடுவோம். திருச்சியில் சந்திப்போம். நாளை நமதே” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here