டார்கெட் கர்நாடகா! அமித்ஷாவின் மாஸ்டர் ப்ளான்!!

பெங்களூர்: கர்நாடக பேரவை தேர்தல் மே.12ல் நடைபெற உள்ளது. கடந்த முறை தவறவிட்ட ஆட்சியை பிடிப்பதற்காக பாஜக தீவிரம் காட்டி வருகிறது.    கட்சித்தலைவர் அமித்ஷா, கர்நாடகாவில் முகாமிட்டு அனைத்து தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில், கன்னட முன்னணி சேனலான பப்ளிக் டிவிக்கு அவர் பேட்டியளித்தார்.  பாஜகவின் வெற்றித்திட்டம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டார்.   அவர் கூறியதாவது:  காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகாவில் பின் தங்கியவளர்ச்சி நிலவுகிறது.                மக்கள் அதனை உணர்ந்து வருகின்றனர். மத்திய அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். 

மாநிலம் முழுவதும் 145தொகுதிகளில் பயணம் செய்து விவசாயிகள், தலித்துகள், ஓபிசி பிரிவினர் போன்றோரை சந்தித்துள்ளேன். வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இன்னும் 2வாரங்கள் சென்றபின்னர் அனைத்து தொகுதிகளுக்கும் சென்றுவந்த பின் வெற்றிவாய்ப்பு குறித்து விபரம் தருவேன். தற்போது வெற்றிக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.அதற்கு இரு காரணங்கள் அடிப்படையானவை.  முதலாவது, முந்தைய பாஜக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற விஷயங்கள் இனி நடக்க வாய்ப்பில்லை. நாங்கள் ஆளும் மாநிலங்களில் 3மாதத்துக்கு ஒருமுறை ஆய்வுக்கூட்டம் நடத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வளர்ச்சிப்பணிகளில் கவனம் செலுத்துகிறோம்.                        மாநில பாஜகவிலும் போதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.                  கர்நாடகாவின் வளர்ச்சியில் மத்திய அரசு தனிக்கவனம் செலுத்துகிறது.  13வது நிதிக்கமிஷன் கர்நாடகாவுக்கு ஒதுக்கிய தொகையை விடவும் கூடுதல் தொகை ஒதுக்கியுள்ளோம்.  மத்திய அரசு திட்டங்களை சரிவர செய்ததால் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால், மாநில அரசு அதனை சரிவர பயன்படுத்தவில்லை. கிராமங்களில் போதிய அளவு வளர்ச்சியில்லை. விவசாய உற்பத்தி குறைந்துள்ளது.

2013ல் மத்திய அரசு மறுத்த லிங்காயத்துக்கு தனிமத அந்தஸ்து விஷயத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளனர். எடியூரப்பாவுக்கு எதிராக லிங்காயத்துக்கள் திரும்பவேண்டும் என்றும், லிங்காயத்து சமூகத்தை சேர்ந்த ஒருவர் முதல்வர் பதவிக்கு வரக்கூடாது என்பதற்காகவும் காங்கிரஸ் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளது. மஜத-வுக்கு எதிராக பாஜக விமர்சனங்கள் கடுமையாக இல்லை என்று கூறுவது தவறு. அவர்கள் ஆட்சியில் தற்போது இல்லை. தற்போதைய போட்டி பாஜகவுக்கும் காங்கிரசுக்கும்தான்.  மஜதவுக்கு அளிக்கும் வாக்குகள் வீண் என்று வாக்காளர்களுக்கு நன்கு தெரியும். இவ்வாறு அமித்ஷா பேட்டியில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here