சீன எல்லையில் இந்திய ராணுவம் குவிப்பு!

அருணாசல பிரதேசம்: சீனா தன்னுடைய படைகளையும், போர் விமானங்களையும், ஆயுதங்களையும் இந்தியா- சீனா ஆகிய இருநாடுகளின் எல்லைப் பகுதியில் குவித்துவருவதாக தகவல்கள் வெளிவருகின்றன.இந்திய படைகளும் எல்லையில் குவிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் டோக்கா லாம் எல்லையில் எத்தகைய சூழல் ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்வதற்கு இந்திய ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.இந்நிலையில் அருணாசலப் பிரதேச மாநிலத்தில் சீன எல்லையையொட்டி உள்ள முக்கியமான பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை அரசு அதிகரித்துள்ளது. இதில், இந்தியா-சீனா-மியான்மர் ஆகிய 3 நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடமும் ஒன்றாகும்.இது தொடர்பாக பிடிஐ ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், “. திபாங், தாவூ-டெலாய், லோஹித் பகுதிகளில் பனிப்பொழிவு அதிகம் உள்ள 17,000 அடி உயரப் பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய – சீன எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் ராணுவ வீரர்கள் பல குழுக்களாக 15 முதல் 30 நாட்கள் சுழற்சி முறையில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here