கர்ப்பிணி முதல் மனைவி கொலை! கணவர் போலீசில் சரண்!!

பெல்லாரி: சந்தேகத்தால் முதல்மனைவியை கொன்ற கணவன் போலீசில் சரணடைந்தான்.
பெல்லாரி மாவட்டம் ராமசாகர் கிராமத்தை சேர்ந்தவர் உமேஷ். கிராமத்தில் பலசரக்கு கடை நடத்திவருகிறார்.இவரது முதல் மனைவியின் பெயர் சசிகலா. இருவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
ஒரு வருடம் கழிந்தும் சசிகலா குழந்தைபெறவில்லை என்பதால் 2வது திருமணம் செய்துகொண்டார் உமேஷ்.இந்நிலையில் சசிகலா கர்ப்பமானார். இதனால் சந்தேகம் அடைந்தார் உமேஷ்.
அவரும், அவரது இரண்டாவது மனைவியும் சசிகலாவை துன்புறுத்தி வந்தனர்.
இந்நிலையில் தோட்டத்துக்கு தனியே சென்றுவந்த சசிகலாவை கல்லால் அடித்து கொன்றார் உமேஷ்.

பின்னர் சசிகலா உடலை அருகில் உள்ள வாய்க்காலில் வீசினார். போலீசில் சென்று சரணடைந்தார். போலீசார் அவரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here