ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் மாயம்! விஞ்ஞானிகள் அதிர்ச்சி!!

ஸ்ரீஹரிகோட்டா: இரு தினங்களுக்கு முன் செலுத்தப்பட்ட ஜிசாட்6ஏ செயற்கைக்கோள் மாயமாகி விட்டது. இதனால் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தகவல் தொடர்பு வசதிக்கான அதிநவீன, ‘ஜிசாட்- 6 ஏ’ செயற்கைக்கோள், கடந்த 29-ம் தேதி மாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இச்செயற்கைக்கோள் 17:50 நிமிடங்களில், பூமியில் இருந்து, 170 கிலோ மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் ஆயுட்காலம், 10 ஆண்டுகள் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அச்செயற்கைக்கோள் நிர்ணயிக்கப்பட்ட 2வது பாதையில் நுழைந்து 51நிமிடங்கள் சிக்னல் கிடைத்துவந்தன.  சனிக்கிழமை காலை சுமார் 12மணியளவில் மாயமாகி உள்ளது.
2டன் எடையுள்ள இச்செயற்கைக்கோள் ரூ.270 கோடியில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here