கார்மோதி ஓட்டல் சரிவு! 10பேர் பலியான பரிதாபம்!!

இந்தூர்: இந்தூரில் ஓட்டல் இடிந்து விழுந்ததில் பத்துபேர் இறந்தனர்.
இந்தூர் பஸ்நிலையம் அருகில் எம்.எஸ். என்ற ஓட்டல் இயங்கிவந்தது.
சனிக்கிழமை இரவு எதிர்பாராத வகையில் வேகமாக வந்த கார் ஓட்டல் சுவற்றில் மோதியது. அதில் ஓட்டல் கட்டிடம் சரிந்து விழுந்தது.
2மாடி உடைய அந்த ஓட்டல் கட்டிடம் 80ஆண்டுக்கு முன் கட்டப்பட்டது.
கடந்த வாரம் ஓட்டல் கூரை இடிந்துவிழுந்தது. இருப்பினும் உரிமையாளர் அதுகுறித்து அக்கறைகாட்டவில்லை.
சனிக்கிழமை சம்பவத்தில் ஓட்டல் மேலாளரின் மகள் உட்பட 10பேர் இறந்துள்ளனர்.
2பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.2லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.50ஆயிரம் அரசு உதவித்தொகை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here