ஹாக்கி வீராங்கனை புகைப்படம்! இளம் தாய்களுக்கு பாடம் புகட்டுகிறது!!

கனடா: ஹாக்கி வீராங்கனை குழந்தைக்கு விளையாட்டு ஓய்வறையில் தாய்ப்பால் ஊட்டும் புகைப்படம் சமூக ஊடகத்தில் அதிகம் பாராட்டுப்பெற்று வருகிறது.கனடாவை சேர்ந்த ஹாக்கி வீராங்கனை ஷிராஸ்மால். 24வயதான இவருக்கு 8வாரத்துக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.
இம்மாத இறுதியில் மாகாண அளவில் ஹாக்கி போட்டி நடைபெறவுள்ளது.அதற்கான பயிற்சி ஆட்டத்துக்கு ஷிரா ஸ்மால் குழந்தையுடன் மைதானம் வந்தார்.
பயிற்சியின் நடுவே ஓய்வு அறைக்கு வந்தார். அப்போது குழந்தை அழுதது.
உடனடியாக மகள் எல்லிக்கு பாலூட்ட தொடங்கினார். அவருடன் இருந்த சக வீராங்கனைகள் தத்தம் வேலைகளை பார்த்துவந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஷிரா ஸ்மால், பாலூட்டுவதை வலியுறுத்திவரும் தொண்டு நிறுவனத்துக்கு அனுப்பிவைத்தார். அப்படம் வைரலாக பரவி வருகிறது.இதுகுறித்து அவர் கூறுகையில், குழந்தை பால்குடிக்க நான் அணிந்திருந்த விளையாட்டு உடை ஒத்துவரவில்லை. எனவே அதனை முழுவதும் நீக்கவேண்டியிருந்தது.பெண்ணின் மார்பகங்கள் செக்ஸ் சிம்பல் அல்ல. அது குழந்தைகளை வளர்ப்பதற்காக இயற்கை கொடுத்த பரிசு.
எல்லா தாய்மார்களும் குழந்தைகளுக்கு பாலூட்ட வேண்டும் என்ற விழிப்புணர்வுக்காக எனது படத்தை வெளியிட அனுமதித்தேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here