Connect with us

Cinema

பாலிவுட் நடிகர் வித்யூத் ஜாம்வால் உடன் நடிகை ஸ்ருதி ஹாசன்!!

Published

on

மும்பை: தமிழில் அஞ்சான் படத்தில் சூர்யாவின் நண்பனாக நடித்தவர் இந்தி நடிகர் வித்யூத் ஜாம்வால். அஜித் நடித்த பில்லா 2, விஜய் நடித்த துப்பாக்கி ஆகிய படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.இந்த நிலையில் தற்போது பாலிவுட்டில் மகேஷ் மஞ்ரேகர் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் வித்யூத் ஜாம்வாலுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் ‘யாரா’ படத்தில் நடித்து வருகின்றனர்.தற்போது அவர் வித்யூத் உடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் முக்கிய வேடங்களில் நஸ்ருதின் ஷா, அமோல் பலேகர் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.இது குறித்துக் கூறியுள்ள வித்யூத், “தேசிய விருது பெற்ற இயக்குநருடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது என்றார். இதன் படப்பிடிப்பை ஏப்ரல் மாதம் துவங்க திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator