பிகாரில் கலவரம்! மத்திய அமைச்சர் மகன் கைது!!

பாகல்பூர்: பீகாரில் மதக்கலவரத்தில் தொடர்புடையவர் என்று மத்திய அமைச்சர் மகன் கைது செய்யப்பட்டார்.பாகல்பூரில் கடந்த 17ஆம் தேதி மத்திய அமைச்சர் அஷ்வினி சௌபேவின் மகன் அர்ஜித் சஷ்வத் தலைமையில் ராமநவமி ஊர்வலம் சென்றது.
இதில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது.
இந்த சம்பவம் தொடர்பாக அர்ஜித் சஷ்வத் உள்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையே, சஷ்வத்தை கைது செய்யக் கடந்த 24ஆம் தேதி கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அவர் பாகல்பூர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.நள்ளிரவில் பாட்னாவில் உள்ள அனுமன் கோவிலில் இருந்த சஷ்வத்தை போலீசார் கைது செய்தனர். அவரை பாகல்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here