வைகோ நடைபயணம் தொண்டா் தீ குளிப்பு!

மதுரை: தேனியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது. நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மதுரையிலில் இருந்து நடைபயணம் மேற்கொண்டார். மதுரை பழங்காநத்தத்தில் நடை பயண துவக்க விழாவை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.இந்த நடைபயணம் தேனி மாவட்டம் கம்பத்தை நோக்கி செல்கிறது. இந்நிலையில் திடீரென கூட்டத்தில் இருந்த சிவகங்கையை சேர்ந்த ம.தி.மு.க தொண்டர் ரவி என்பவர் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்தார்.தீக்குளிக்கக் கூடாது என பலமுறை கூறியும் சிலர் இப்படி செய்து விடுகின்றனர். இயற்கை அந்த தம்பியை காப்பாற்ற வேண்டும் என கண்ணீர் மல்க கூறி கூறினார். அவரது சிகிச்சைக்கு உடனடியாக ஏற்பாடு செய்ய கேட்டுக்கொண்டார். பின் தனது நடை பயணத்தை தொடர்ந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here