ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் அரசு வேடிக்கை பார்ப்பது புரியாத புதிர்!

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான பொதுமக்கள் போராட்டத்தை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது புரியாத புதிர் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்டும் வரும் ஸ்டெர்லைட் ஆலை பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பல விதங்களில் கேடு விளைவிக்கிறது. இதனை உடனே மூடக்கோரி பொதுமக்கள் 48வது நாளாக போராடி வருகின்றனர்.இது குறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவிட்டுள்ளார். ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் பல்வேறு நோய்களால் பாதிக்கப் பட்டிருக்கிறோம்.47 நாட்களாக மக்கள் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இது புரியாத புதிராக உள்ளது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here