ரஜினியின் அடுத்த ஜோடி யார்?

சென்னை: தமிழ் சினிமா வேலை நிறுத்தம் காரணமாக ரஜினி நடித்த காலா திரைப்படம் வெளியாவதில் தாமதம் ஆகி வருகிறது.இந்நிலையில் ரஜினி அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். சன் பிக்சா்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். கார்த்திக் திரைப்படத்துக்கான டெக்னீஷியன்களைத் தேர்வு செய்து வருகிறார்.ரஜினிக்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோன், த்ரிஷா, ஆகிய இருவரும் பேசப்பட்டிருந்தது. தீபிகா, த்ரிஷா ஆகிய இருவரில் யார் என்ற கேள்விதான் இருக்கிறது.
த்ரிஷா தமிழ் சினிமாவில் கடந்த 15 வருடங்களாக ஹீரோயினாக நடித்து வருகிறார். இவா் பல முன்னனி நாயகர்களுடன் நடித்து விட்டார். ஆனால் ரஜினியுடன் ஜோடி சேரவில்லை. இப்படத்தில் ரஜினியுடன் த்ரிஷா ஜோடி சேர்ந்தால் இந்த குறையும் தீா்ந்து விடும் என்கிறார்கள்.ஆன்மீக அரசியலில் ஈடுபட்டுள்ள ரஜினியின் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here