உண்மையை சொல்லுங்க! நீதிபதி கண்டனம்!!

சென்னை: காவல்துறை உயர் அதிகாரிகள் வீட்டில் பணி புரியும் ஆர்டர்லி முறை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.இந்த வழக்கில் உயர் அதிகாரிகள் வீட்டில் ஆர்டர்லியாக வேலை செய்பவர்களின் விவரங்களை தாக்கல் செய்யுமாறு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டிருந்தார்.மார்ச் 22-ம் தேதி போலீஸார் தாக்கல் செய்த பதில் செய்தனர்.இதில் தமிழகத்தில் ஆர்டர்லியாக யாருமே வேலை செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதற்கு நீதிபதி கிருபாகரன் கண்டனம் தெரிவித்தார்.மேலும் இந்த பதில் மனுவை தயார் செய்த ஏஐஜி மகேஷ்வரன் ஏப்ரல் 23-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார். எத்தனை பேர் ஆர்டர்லியாக வேலை செய்கிறார்கள் என்பது குறித்து உண்மை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும்
உத்தரவிட்டார்.இதையடுத்து தமிழக காவல்துறை, ஓய்வுபெற்ற அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகளாக வேலை செய்யும் போலீஸாரின் உண்மை பட்டியலை கேட்டு அதிகாரிகளுக்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here