ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட இந்தியர்களின் உடல்கள் இந்தியா வருமா?

டெல்லி: கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி 40 இந்தியர்கள் உட்பட 91 பேரை ஐஎஸ் தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்தினர்.கடத்தப்பட்ட இந்தியர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் கடத்தப்பட்ட 40 இந்தியர்களில் ஹர்மீத் என்பவர் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பினார். தீவிரவாதிகள் 39 இந்தியர்களையும் படுகொலை செய்ததாகத் தெரிவித்தார். ஆனால், மத்திய அரசு இதற்கு மறுப்பு தெரிவித்தது.இந்நிலையில் கடத்தப்பட்ட உறவினர்களின் மரபணு மாதிரிகள் எடுக்கப்பட்டன. கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டு விட்டதாகத் தற்போது அந்த மரபணு சோதனையின் அடிப்படையில் தகவல் தெரிந்தது.அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மாநிலங்களவையில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்கள் 39 பேரும் கொல்லப்பட்டதாக மார்ச் 20ஆம் தேதி அறிவித்தார்.
மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் உடலை இந்தியா கொண்டு வர ஏப்ரல் 1ஆம் தேதி ஈராக் நாட்டுக்கு செல்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here