இந்திய ரயில்வேயில் வேலைக்கு விண்ணப்பம்! ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையை மிஞ்சியது!!

13 லட்சம் ஊழியர்களை வேலையில் அமர்த்தியுள்ளது ரயில்வே துறை. நாட்டிலேயே மிகப் பெரிய பொதுத் துறை நிறுவனம்.7 வது சம்பள கமிஷனின் 2 வது மட்டத்தில் உள்ள உதவியாளர் லோக்கோ பைலட், டெக்னீசியன் தொழில் நுட்ப வல்லுநர்கள், கேன்மேன், டிராக் மேன், கிரேன் டிரைவர்கள் உள்ளிட்ட சி மற்றும் டி பிரிவுகளில் உள்ள 90,000 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.இதற்கான ஆன்லைன் தேர்வுகளில் பங்கேற்பதற்காக கடந்த ஒரு வாரத்தில் 2 கோடியே 80 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இது ஆஸ்திரேலியா மக்கள் தொகையைவிட அதிகம். 2 கோடியே 47 லட்சம் மக்களே ஆஸ்திரேலியாவில் உள்ளனர்.

பொதுப்பிரிவினர் 30 வயது வரை, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 33 வயது வரை, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர்கள் 35 வயது வரை உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். ரூ.18,000-ல் இருந்து ரூ.63,200 வரை மாத சம்பளமாக பிரிவின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் மேலும் லட்சக்கணக்கானோர் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here