தமிழகத்தில் சாலை விபத்து 37 சதவீதம் அதிகரிப்பு!

சென்னை: தமிழகத்தில் சுமார் 2 கோடியே 51 லட்சத்து வாகனங்கள் இயங்குகின்றன. நாளுக்கு நாள் வாகனங்கள் அதிகரித்து வருகிறது.இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுகிறது. மேலும் சாலை விபத்தும் அதிகரிக்கிறது. தொடர்ந்து தமிழகம் சாலை விபத்தில் முதலிடத்தில் உள்ளது.ஆண்டுக்கு சராசரியாக 60,000 சாலை விபத்துக்கள் நடக்கின்றன.
கடந்த 2001ம் ஆண்டை ஒப்பிடும்போது, 2017ல் வாகனங்கள் எண்ணிக்கை 156 சதவீதம் அதிகரித்துள்ளது. 2017ல் சாலை விபத்தால் 16,157 பேர் உயிரிழந்துள்ளனர். 2001ல் நடந்த விபத்தை விட 2016ம் ஆண்டில் 37 சதவீதம் சாலை விபத்து அதிகரித்துள்ளது.2017ல், அரசு பஸ்களால் 2796 விபத்துக்கள் ஏற்பட்டது. அதில் 1020 பேர் உயிர் இழந்துள்ளனர். டிரைவர்களின் தவறால் நடந்த விபத்துகளில் தான் அதிகபட்சம் 96.23 சதவீதம் பேர் உயிர் இழந்துள்ளனர். பைக்கில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியாததால் 72 சதவீதம் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here