இரட்டைக்கோபுர தாக்குதல் வழக்கு! சவுதி அரேபியாவின் கோரிக்கை நிராகரிப்பு!

நியூயார்க்: இரட்டைக்கோபுர தாக்குதல் வழக்கில் சவுதி அரேபியாவின் கோரிக்கையை அமெரிக்கநீதிமன்றம் நிராகரித்தது.விமானங்களை கடத்தி வந்து அமெரிக்காவில் இரட்டை கோபுரம், பெண்டகன் ஆகியவற்றை அல்கொய்தா பயங்கரவாதிகள் தாக்கினர்.
இச்சம்பவத்தில் 3ஆயிரம் பேர் இறந்தனர். 19பேர் இப்பெரும் பாதக செயலில் ஈடுபட்டுள்ளதாகதெரியவந்தது.அவற்றில் 15பேர் சவுதி அரேபியாவில் வசித்து வந்ததற்கான ஆதாரங்கள் சிக்கின.
எனவே, இவ்வழக்கில் சவுதி அரேபியாவையும் பிரதிவாதியாக சேர்த்து விசாரிக்கப்பட்டு வருகிறது.மென்ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடந்துவருகிறது.
சவுதி அரேபியா அரசு சார்பில் தாக்கல் செய்த மனுவில், தங்களுக்கு எதிராக பல மனுக்கள் நிலுவையில் உள்ளன.பயங்கரவாதத்துக்கு நாங்கள் ஒருபோதும் துணைபோனதில்லை. குற்றவாளிகள் சவுதியில்இருந்தார்கள் என்ற வாதமும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை.
இவ்வழக்கை விசாரிப்பதற்காக அமெரிக்க செனட் சபையில் இயற்றப்பட்ட சட்டம் அமெரிக்காவின்அரசியல்சாசன விதியை மீறுவதாக உள்ளது.எனவே எங்களுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்றார்.
அதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றுகூறியுள்ளது

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here