ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு ஏன்?

தூத்துக்குடி: தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இது எதிர்க்கட்சிகள் தூண்டிவிட்டு நடைபெறும் போராட்டம் என்று முதல்வர் கூறியுள்ளார். இந்த ஆலை குஜராத், கோவா, கேரளா மாநில மக்களால் எதிர்ப்புக்குள்ளாகி அங்கு துவக்கப்படாமல் தமிழகத்தில் தஞ்சம் அடைந்தது.

1996மார்ச்சில் தூத்துக்குடியில் இந்த ஆலை அமைவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
மாசுபாடு விளைவிக்கும் எந்த நடவடிக்கையிலும் இந்நிறுவனம் ஈடுபடாது என்ற உத்தரவாதத்துடன் இந்த ஆலை செயல்பட தொடங்கியது.இருந்தபோதும் ஆலைக்கான இரும்புத்தாது கொண்டுவந்த கப்பல் விரட்டியடிக்கப்பட்டது. பின்னர் கொச்சியில் இருந்து தாமிரத்தாது தூத்துக்குடி எடுத்துவரப்பட்டது.
தற்போது ஆலையின் கழிவுகள் கடலில் கலக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆலையில் இருந்து வெளியேறும் புகை நச்சு நிறைந்ததாக உள்ளதால் அதை சுவாசிப்பவர்களுக்கு பிரச்சனை ஏற்படுத்துகிறது.

1997ல் இந்த ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுவாயுவால் சுமார் 200பேர் பாதிக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து ஆலை எதிர்ப்பு போராட்டம் தீவிரமானது. விரிவாக்கப்பணிகளால் சுற்றுச்சூழல் பிரச்சனை மேலும் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் போராட்டம் தற்போது வெடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here