மும்பை: மனஅழுத்தத்தை குறைப்பதற்கு பிரபல பாலிவுட் நடிகை
கங்கனா ரனாவத் யோசனை தெரிவித்துள்ளார்.கங்கனா ரனாவத் ராணி லட்சுமிபாய் வேடத்தில் ‘மணிகார்னிகா’ என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்காக ’வாள் சண்டை’, ‘குதிரையேற்றம்’ போன்ற சாகச பயிற்சிகளையும் கற்றுள்ளார்.
மணாலியில் உள்ள தன் பங்களாவில் சமீபத்தில் 31ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். அதற்காக 31 மரக்கன்றுகளை நட்டார்.
“ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிறந்தநாள் வரும்போது ஏதேனும் ஒரு சபதம் எடுத்துக்கொள்வார்கள். எனது பிறந்தநாளில் மரக்கன்றுகள் நடத் திட்டமிட்டேன்.
அது மகிழ்ச்சியாக இருந்தது. மரக்கன்றுகள் நடுவதன் மூலம் மனஅழுத்தங்களைக் குறைக்க முடியும்” என்று கூறியுள்ளார்.