அரசியலில் காலியிடம் இல்லை!! ரஜினி, கமல் நடையை கட்டலாம்!

சென்னை: தமிழக அரசியலில் காலியிடம் ஏதும் இல்லை. புதிதாக அரசியலுக்கு வர நினைப்பவர்கள் வேறு மாநிலங்களுக்கு செல்லலாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரையில் அதிமுக சார்பாக 120 ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டது.
முதல்வர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
“தமிழகத்தில் பலரும் அரசியலுக்கு வருகிறேன் என புதிது புதிதாக கிளம்பிவிட்டார்கள்.
தமிழகத்தில் காலியிடத்தை நிரப்பப் போகிறார்களாம்.
இங்கே எங்கு வெற்றிடம் இருக்கிறது?
தமிழக அரசியலில் அனைத்து காலியிடங்களும் நிரப்பப்பட்டுவிட்டன.
புதிதாக அரசியலுக்கு வருபவர்கள் வேறு மாநிலங்களுக்கு செல்லலாம்.

பல ஆண்டுகளாக உழைத்து, நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும்
நிறைவேற்றி மக்களிடம் செல்வாக்கு பெற்றது அதிமுக” என்றார் முதல்வர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here