சினிமா தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக்! ரஜினிக்கு விஷால் பதிலடி!

சென்னை: தமிழ் சினிமாவை சீரமைக்கும் பணி நடந்துவருகிறது. வேலை நிறுத்தம் செய்யவில்லை என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
டிஜிட்டல் நிறுவனங்களின் கட்டணத்தை குறைப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகிறது.
கடந்த 1ம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் செய்யப்படாமல் உள்ளன.
மேலும், படப்பிடிப்புகள், ஸ்டுடியோ வேலைகளும் நின்றுபோயுள்ளன.
இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தம் முடிவுக்குவரவேண்டும் என்று ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.அதற்கு பதிலடி தரும் வகையில் நடிகர் விஷால் இன்று பேட்டியளித்தார்.
மக்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் தியேட்டரில் படம் பார்க்க வேண்டும்.
அனைத்துத் திரையரங்குகளிலும் புரொஜக்டர்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.
டிக்கெட் விற்கும் முறையை கணினி மயமாக்க வேண்டும்.ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும்போது கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது.
சினிமா சாராத ஒரு நிறுவனம் இங்கே கோடி கோடியாகச் சம்பாதிக்கிறது.
தயாரிப்பாளர்கள் நஷ்டமடைந்து கொண்டே இருக்கிறோம். தமிழ் சினிமாவைத் தனியாருக்குத் தாரைவார்க்க முடியாது.எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும்.
இதை வேலை நிறுத்தம் என்று சொல்வதைவிட, தமிழ் சினிமாவை சீரமைக்கும் பணி என்றே  கருதுகிறோம்.தமிழக அரசு இந்தப் பிரச்சினையில் நேரடியாகத் தலையிட்டு தீர்வுகாண வேண்டும்.
இதற்காக முதல்வர் மற்றும் செய்தித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனுஅளிக்கவுள்ளோம். இவ்வாறு விஷால் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here