போலியாக வங்கி நடத்தியவா் கைது

உத்திரபிரதேசம்: உத்திரபிரதேச மாவட்டத்திலுள்ள முலாயம் நகரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து போலி கர்நாடகா வங்கியின் கிளையை வினோத் குமார் கம்ளே நடத்தி வந்துள்ளார்.அப்பகுதியை சோ்ந்த மக்கள் வங்கி கணக்கை துவங்கி ரூபாய் 1.37 லட்சம் டெபாசிட் செய்துள்ளனர். வங்கி நடவடிக்கை குறித்து சந்தேகம் அடைந்த வாடிக்கையாளர்கள் கர்நாடக வங்கியன் தலைமையகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து கர்நாடகா வங்கியின் துணை பொதுமேலாளர் பிபிஎச் உதயா காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். வினோத்குமார் கம்ளேவை போலீசார் கைது செய்தனர்.விசாரணையில் போலி ஆவணங்கள், 184 பாஸ்புத்தகங்கள், 3 கம்ப்யூட்டர்கள், டெபாசிட் தொகை ரூபாய் 1.37 லட்சம் கைப்பற்றினர். மேலும் கிராமப்பகுதிகளில் கிளை வங்கி தொடங்க ரூபாய் 60,000 ஆயிரம் முன்வைப்பு தொகையை கேட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here