பொய்ச்செய்தி வெளியீடு! இணைய இதழ் ஆசிரியர் கைது!!

பெங்களூர்: பிரதமருக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் கர்நாடக பத்திரிகையாளர் பொய்ச்செய்தி வழக்கில் கைது செய்யப்பட்டார்.போஸ்ட்கார்ட் நியூஸ் எனப்படும் இணைய செய்திதளம் நடத்தி வருபவர் மகேஷ் விக்ரம். இவரது டுவிட்டர் கணக்கில் பிரதமர் பின் தொடர்பவராக உள்ளார். இவர் கடந்தவாரம் இணையதளத்தில் ஜெயின் துறவி ஒருவர் தாக்கப்பட்டார் என்று செய்தி, படம் வெளியிட்டிருந்தார்.ஜெயின் துறவி விபத்தில் காயமுற்றார் என்றும் மதப்பிரச்சனையை எழுப்பும் வகையில் மகேஷ்விக்ரம் செய்தியை திரித்து வெளியிட்டார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்தனர். ஜெயின் துறவி மாயங்க்சாகர், முஸ்லிம் இளைஞர் ஒருவரது பைக் மோதியது. அதில் அவருக்கு காயமேற்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவாகி விசாரணை நடந்தது. ஆனால், இதனை முஸ்லிம் இளைஞரால் தாக்கப்பட்ட ஜெயின் துறவி, சித்தராமையா ஆட்சியில் யாரும் பாதுகாப்பாக இல்லை என்று செய்தியாக்கி இருந்தார் மகேஷ்விக்ரம்.
இதனால் அவரை போலீசார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here