டேட்டிங் ஆப் உதவியால் நெருக்கம்! கல்லூரி மாணவர் கொல்லப்பட்டார்!!

டெல்லி: டேட்டிங் ஆப் உதவியுடன் நட்புக்கொண்ட கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டார்.டெல்லியில் உள்ள ராம்லால் ஆனந்த் கல்லூரியில் பிகாம் இறுதியாண்டு படித்துவந்தவர் ஆயுஷ். இவர் செல்போனில் டேட்டிங் ஆப்-ஐ டவுன்லோடு செய்து அதன்வழியாக நண்பர்களை தேடினார்.டெல்லியை சேர்ந்த இஸ்தியாக் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் நெருக்கமாக  பழகிவந்தனர். கடந்த பத்து நாட்களில் இருவரும் மூன்று முறை சந்தித்துள்ளனர்.கடைசி சந்திப்பு கடந்த 22ம் தேதி நடந்துள்ளது. அன்றிலிருந்து ஆயுஷ் காணாமல் போயுள்ளார். அவரது தந்தையின் செல்போனுக்கு வந்த வாட்ஸ் ஆப் செய்தியில் ஆயுஷ் தலையில் காயம் ஏற்பட்டுள்ள படங்களும், அவர் சட்டையில் ரத்தக்கறை உள்ள படங்களும் வந்தன.ஆயுஷ் கடத்தப்பட்டுள்ளார். அவரை விடுவிக்க ரூ.5லட்சம் தரவேண்டும் என்றும் செய்திகள் வந்தன.
அவரது தந்தை பணத்துடன் சென்று பார்த்தபோது ஆயுஷ் தலையில் பலத்த காயங்களுடன் இறந்துகிடந்தார். அவரது செல்போனை போலீசார் சோதனையிட்டபோது அவருடன் இஸ்தியாக் பழகியது தெரியவந்தது.
போலீசார் விசாரணையில் இஸ்தியாக் உண்மையை ஒப்புக்கொண்டார். தனக்கு முழு ஒத்துழைப்பு தராததால் ஆயுஷை ஆத்திரத்தால் கொன்றதாக அவர் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here