குதிரை சவாரியால் ஆத்திரம்! தலித் வாலிபர் படுகொலை!!

குஜராத்: குதிரை சவாரி செய்ததற்காக தலித் வாலிபர் கொல்லப்பட்டுள்ளார்.
அதிர்ச்சி தரும் இச்சம்பவம் குஜராத்மாநிலம் பாவ்நகர் மாவட்டம் திம்பி கிராமத்தில் நடந்துள்ளது.ஐந்து மாதங்களுக்கு முன் திம்பி கிராமத்தை சேர்ந்த பிரதீப் ரத்தோட் குதிரை ஒன்றை வாங்கினார்.
அவர் வீட்டுக்கும், தோட்டம் மற்றும் வெளியிடங்களுக்கு குதிரையிலேயே சென்றுவந்தார்.இதனைப்பார்த்த அங்குவசிக்கும் உயர்ஜாதியை சேர்ந்தவர்கள் ரத்தோடின் குடும்பத்தினரை எச்சரித்தனர். ஆனால், குதிரையை விற்க பிரதீப் மறுத்துவிட்டார். வழக்கம்போல் குதிரையில் சென்றுவந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பிரதீப் தோட்டத்துக்கு சென்று திரும்பும்போது கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here